மயிலாடுதுறை: கழிவுமண்ணை அப்புறப்படுத்த கோரிக்கை

மயிலாடுதுறை நகர் பகுதியில் முக்கிய பகுதியாக விளங்குவது கூறைநாடு வண்டிப்பேட்டை. இந்த பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மயிலாடுதுறை ரயில் நிலையம் செல்கின்றன. இந்நிலையில் இந்த பகுதியில் கழிவு மண் கொட்டப்பட்டு ஒரு வாரகாலமாக சாலை வசதிக்கு மிகுந்த இடையூறாக உள்ளது. அருகில் பள்ளி, கோவில் ஆகியவை உள்ளன. எனவே நகராட்சி நிர்வாகம் இதனை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி