மயிலாடுதுறை: நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

மயிலாடுதுறை நகராட்சி உட்பட்ட 18வது வார்டு பெரிய தைக்கால் தெரு பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்துவதால் அந்த பகுதியை மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி