இரவிலும் மாவட்ட முழுவதும் தொடரும் மழை

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வறண்ட வானிலைக்குப் பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது. தரங்கம்பாடி, திருக்கடையூர், செம்பனார்கோயில், சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. துலா உற்சவத்தை முன்னிட்டு மகாதானத் தெருவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி