தலைஞாயிறு: 2 மாதமாக திறக்காததால் பொதுமக்கள் வேதனை

தலைஞாயிறு அருகே உள்ள அவரிக்காடு ஊராட்சியில், 100 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கோயில் பூட்டப்பட்டிருப்பதால், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும், நேர்த்திக்கடன் செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படாததால் ஊருக்கு தீங்கு ஏற்படுமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோயிலை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி