மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் தக்ஷின் ரயில்வே ஊழியர் சங்கம் சார்பில் அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 10 ஆண்டுகளாக இடம் கேட்டு வருகின்றனர். இடம் வழங்கப்படாததைக் கண்டித்து, ரயில்வே சந்திப்பில் கீற்று கொட்டகை கட்டி குடியேறும் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கிளை தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு திருச்சி கோட்ட உதவி தலைவர்கள் வேந்தன், பால்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.