கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், அஞ்சல் ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எட்டாவது ஊதியக்குழுவில் கிராமிய அஞ்சல் ஊழியர்களை சேர்க்க வேண்டும், இலக்கு நிர்ணயம் என்ற பெயரில் ஊழியர்களை கசக்கி பிழிவதை தடுக்க வேண்டும், மகப்பேறு விடுப்பில் உள்ள காலங்களில் மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி