மயிலாடுதுறை நகர துணைமின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 2ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்தத் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் தருமபுரம் ரோடு, மகாதான தெரு, பட்டமங்கல தெரு, அரசு மருத்துவமனை சாலை, ஸ்டேட் பேங்க் ரோடு, திருவிளந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.