நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (மே 14) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழக கடல்களில் வளிண்டல காற்றழுத்த தாழ்வு பாதை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதே வேளையில் மே 16 முதல் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்ககூடும்.