மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் வைகாசி விசாக பிறந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் 21 ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி பஞ்சமூர்த்திகள் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.