மயிலாடுதுறை மாவட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், துல்லியமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படுகின்றன. தகுதியான அனைவரும் இந்தப் பணியில் பங்கேற்று தங்கள் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.