அதன்படி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திய போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 77 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 149 குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.நிகழாண்டில் 13 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 12 கொலைகள் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்தவை. இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.174 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 64,78,275 மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.