சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் தேநீர் கப்புகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில், 500 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.