மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி மருத்துவ மாணவி பலி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில், சென்னையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி ஹரிணி (20) சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது பெற்றோர், உறவினர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். வேளாங்கண்ணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெரம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி