சீர்காழி: முத்து மாரியம்மன் கோவில் மகா சண்டியாகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மகாசண்டியாக பெருவிழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கி மகா சண்டி ஹோமம் பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி