ஈ சிஆர் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

நாகூர் - நாகை கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க மின் கோபுர விளக்குகள் மற்றும் இரும்பு தடுப்புகள் அமைக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் மாநில செயலாளர் அறிவழகன், நகர செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் நேற்று நாகூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையைக் கடந்து செல்வதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி