மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரக்கத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு கடைவீதி குத்தாலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெற்றது. இதில் குத்தாலம் போலீசார் வாகனங்களில் உரிய தரவுகள் உள்ளனவா என தணிக்கை செய்தனர். மேலும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.