பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்த கீழ்வேளூர் எம்எல்ஏ

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிள்ளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நேரில் சென்று ஆய்வு செய்தார். கட்டிடப் பணிகளை உடனடியாக விரைந்து முடித்துத் தருமாறு ஒப்பந்தக்காரர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்தையன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிபாசு மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி