மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தெருமுனை பொதுக்கூட்டம் மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள விஜய தியேட்டர் பகுதியில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்று தலைமை தாங்கினார். மேலும் இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காமராஜர் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் மாணவர் நலன் குறித்து பேசினார்.