அந்த இடம் அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான வழுவூர் என்று அழைக்கப்படுகிறது. அந்த முனிவர்கள் வசித்த புகழ்பெற்ற தாருகா வனத்தில் 54 அடி உயரத்தில் புதிதாக சிவாலயம் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. தாருகா வனத்து சித்தர் பீடம் என்று அழைக்கப்படும் இந்த நவீன ஆலயத்தின் குடமுழுக்கு விழா வரும் ஏழாம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு புனித தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி ஆற்றின் முக்கிய கிளை ஆறான வீரசோழன் ஆற்றில் இருந்து மூன்று யானைகள் மேல் புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மங்கள வாத்தியங்கள் மற்றும் பறை இசை முழங்க ஊர்வலம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.