மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட தில்லையாடி, காட்டுசேரி, திருக்கடையூர், திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல், திருவிளையாடல் பல்வேறு பகுதியில் காலையில் பனிப்பொழிவு காணப்பட்டது. அவ்வப்போழுது விட்டுவிட்டு காலை நேரங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.