மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவிலும் தொடரும் கனமழை

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தது. இன்று அதிகாலை வரை மழை பெய்த நிலையில், பகல் முழுவதும் மந்தமான வானிலை நிலவியது. மாலை முதல் தூரல் மழை பெய்து வந்த நிலையில், திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்புவோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி