மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு, குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவமாகப் பேசியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.