மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 500 ஆண்டுகளாக தருமபுரம் ஆதீனம் பாரத தேசத்தில் தர்ம சனாதனத்தை பாதுகாத்து வருவதாக கூறினார். பிரதமர் மோடி தமிழ் மொழி மீது மிகுந்த மரியாதை உடையவர் என்றும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மடாதிபதிகளை அழைத்து செங்கோல் வாங்கியது வரலாற்று நிகழ்வு என்றும் ஆளுநர் பேசினார்.