கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை முழு கொள்ளவு எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் வழியாக வெளியேற்றபடுகிறது, கொள்ளிட ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வழியாக பழையார் கடலில் கலந்துவருகிறது. தொடர்ந்து ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதால் இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே படுகையில் வசிக்கும் பொதுமக்கள் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பனங்காட்டான்குடி, வடரங்கம், வாடி, கொள்ளிடம், சந்தபடுகை, திட்டுபடுகை, அளக்குடி, நாதல்படுகை, வெள்ளைமணல், முதலைமேடுதிட்டு, மகேந்திரப்பள்ளி ஆகிய கிராமத்தில் சீர்காழி வட்டாச்சியர் இளங்கோவன் முன்னிலையில் வருவாய்துறையினர் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் தங்கி உள்ளவர்களை ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொள்ளிட ஆற்றில் விட வேண்டாம் எனவும் பாதுகாப்பாக கரையில் கட்டி போடவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

தொடர்புடைய செய்தி