மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம் தொகுதிகளுக்கான மண்டல அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி இன்று (19.02.2026) மாவட்ட ஆட்சியர் திரு. ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மண்டல அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். பயிற்சியில் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி