மயிலாடுதுறையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மின் திட்டங்களை தடை செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும்.

தினக்கூலியாக உயர்ந்து வரும் விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப ரூபாய் 600 வழங்க வேண்டும் வீடுற்ற நிலமற்ற ஏழைகளுக்கு 3 சென்ட் வீட்டு மனை பட்டாவும் 2 ஏக்கர் நிலமும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அப்போது அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி