மயிலாடுதுறை வள்ளலார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தந்தை நரசிம்மன், தாய் சாந்தலட்சுமி, ஓட்டுநர் ராம் ஆகியோர் நேற்று (மே 14) மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் வெள்ளகோவில் அருகே சாலை ஓரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலை ஓரம் பணியில் இருந்த காவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.