மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பட்டவெளி தெருவில் உள்ள பழைய மின்கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் குழந்தைகள் விளையாடும்போது ஆபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆபத்தான நிலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.