மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் துணைத் தலைவர் ஏ. தனசேகரன் தலைமை வகித்தார். பொறியாளர் சங்கம் அருட்செல்வன் முன்னிலை வகித்தார். எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் கே. சாரதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மின்வாரியங்கள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து போராடிவரும் அம்மாநில மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மின் வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். நிறைவாக, செயல் தலைவர் கே. சேகர் நன்றி கூறினார்.