புகையில்லா போகிக்கொண்டாட மாவட்ட ஆட்சியர் அழைப்பு

நமது முன்னோர்கள் போகிப்பண்டிகையை இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை எரித்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் இன்றைய சூழலில் பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, விமானப் போக்குவரத்திலும் தாமதம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி