தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய மகள்கள்

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் மாலதி. இவருக்கு மூன்று பெண்கள் உள்ளனர். இந்நிலையில் மூன்று பெண்களும் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதால் மனம் உடைந்த தாய் மாலதி இருக்க இடம் இன்றி வாழ்வாதாரம் எழுந்து தவிப்பதாக கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தாய் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி