நாகை மாவட்டத்தில் 2004 சுனாமி பேரழிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட காங்கிரீட் வீடுகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் சேதமடைந்துள்ளன. தமிழக அரசு மறுசீரமைப்பிற்காக 50 ஆயிரம் முதல் 2.40 லட்சம் ரூபாய் வரை வழங்கினாலும், தெத்தி பகுதியில் அனைவருக்கும் வழங்காமல் குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும், உண்மையான சேதமடைந்தவர்களை புறக்கணித்து சிலர் அரசியல் செய்வதாகவும் மக்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்கள், இடைத்தரகர்கள் இன்றி அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையான மறுசீரமைப்பு தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.