மயிலாடுதுறை: ஊராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானதிராஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது ஊராட்சி மன்ற அலுவலக கோப்புகள் உரிய முறையில் பராமரிக்கப்படுகின்றனவா என கேட்டறிந்தார். மேலும் ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் விவரங்களையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஊராட்சி செயலாளர் மாரியப்பன் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி