மயிலாடுதுறை: பிளாட்பார்மில் மீட்கப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் சேர்ப்பு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடந்த மே 26ஆம் தேதி ஐந்தாவது நடைமேடையில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுதபடி ஆதரவற்ற நிலையில் இருப்பதாக போலீசாருக்கு பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரயில்வே காவல் ஆய்வாளர் சிவ வடிவேல் உடனடியாக குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் குழந்தையை பத்திரமாக மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பராமரித்து வந்துள்ளனர். இதனிடையே இன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் அறிவுறுத்தலின்படி அரசு தத்துவள மையத்தில் குழந்தை பத்திரமாக சேர்க்கப்பட்டது. தொடர்ந்து அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் ,ஆரோக்கியராஜ், குழந்தை சேவை அமைப்பு ஆற்றுப்படுத்தினர் தீபிகா மற்றும் மருத்துவர்கள் இணைந்துள்இணைந்து குழந்தையை ஒப்படைத்தனர். அதுமட்டுமின்றி குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர். மேலும் ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி