மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாம் கட்ட முகாமை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மேலும் இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.