மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்த மேல்நிலைப் பள்ளியில் சீர்காழி உருவ வட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சதுரங்க விளையாட்டில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.