சீர்காழி: திமுகவினர் மீது வழக்கு பதிவு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், சென்னை திமுக இளைஞரணி கூட்ட நகலை எரித்த காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சீர்காழி போலீசார் அனுமதி இன்றி ஒன்று கூடி போராட்டம் நடத்தியதாக திமுகவைச் சேர்ந்த மருது நெடுஞ்செழியன், நவீன் செந்தில் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி