மயிலாடுதுறை: 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உங்களைத் தேடி முகாம் ஜன. 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்ற திட்டம் குத்தாலம் வட்டாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களால் ஜன. 22-ஆம் தேதி காலை 9 முதல் மறுநாள் காலை 9 மணி வரை குத்தாலம் வட்டாரத்தில் தங்கி களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்யப்பட உள்ளது. 

எனவே, குத்தாலம் வட்டாரத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்தக் கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி