மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தான் சாவடி பேருந்து நிலையம் சேதமடைந்த நிலையில் இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக பேருந்து நிழலகம் கட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நிறைவு பெறாமல் இடையில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மீண்டும் பேருந்து நிழலகத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.