பீகார் தேர்தல் எதிரொலி; மயிலாடுதுறையில் பாஜக கொண்டாட்டம்

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றி முகத்தை மயிலாடுதுறையில் பாஜகவினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள கிட்டப்பாடி அங்காடி முன்பு பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி