மயிலாடுதுறையில் மிளகாய் பொடியை தூவி பைக் திருட்டு

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ் குமார். இவர் டாஸ்மாக்கில் விற்பனையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது இவரை வழிமறித்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், ரமேஷின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பைக்கை பறித்துச் சென்றது. இது குறித்து ரமேஷ்குமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் நேற்று(செப்.5) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி