நாகப்பட்டினம் மாவட்டத்தில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் 100% வாக்களிப்பதை உறுதிசெய்ய மாவட்ட இயக்க மேலாண்மை அலகு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேர்தல் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், ரங்கோலி கோலங்கள் மூலமும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.