மயிலாடுதுறையில் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது. போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் கொடியசைத்து துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட வாகன பழுது பார்ப்போர் பங்கேற்று பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.