ஆபத்து சோறு என்றும் கறி சோறு வழங்கும் விழா

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூத்தூர் குருக்கத்தி பிரதான சாலையில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான பீர்காயபு ஒலியுல்லாஹ் தர்காவில், பாரம்பரியமாக ஆபத்து சோறு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காலரா நோய் காலத்தில் பொது மக்களுக்கு சோறு சமைத்து கொடுத்து நோயை விரட்டியதாக நம்பிக்கை உள்ளது. இதைத் தொடர்ந்து, ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கு முன்பு நடைபெறும் இந்த விழாவில், 500 கிலோ ஆட்டுக்கறி மற்றும் 500 மரக்கால் அரிசி கொண்டு கறி சோறு சமைக்கப்பட்டு, சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் சாதி, மத பேதமின்றி பகிர்ந்து உண்டனர். ஒரே தட்டில் இஸ்லாமிய மற்றும் இந்து பெண்கள் அமர்ந்து உண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி