சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம் நோக்கி அரசுப் பேருந்து காலை புறப்பட்டது. சீர்காழி அருகே சூரக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த உப்பனாற்று வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் நெய்தவாசல் சுரேஷ் (34) , வடலூா் பகுதியை சோ்ந்த நடத்துநா் சிங்கராயா், பயணிகள் பாஸ்கர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மற்ற 5 பேர் முதலுதவிக்குப் பின்னர் வீடு திரும்பினர். விபத்து குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.