நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாய்மேடு காவல் நிலையத்தின் கீழ் உள்ள தாணிக்கோட்டம் கடைத்தெரு பகுதியில் வாகன சோதனையின் போது, ராஜஸ்தானைச் சேர்ந்த சோகன்லால் (38) மற்றும் ரமேஷ்குமார் (30) ஆகியோரிடமிருந்து சுமார் 204 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் மற்றும் 3 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.