தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாடாக்குடியில் உள்ள தில்லையம்பூர் காலனி தெருவில் வசிப்பவர் கூலித் தொழிலாளி சத்யராஜ் (40) கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (35). புதன்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த இவர்களது குழந்தை இனியாளை (3) நீண்ட நேரமாகியும் காணவில்லை. இதையடுத்து மகாலட்சுமி தேடியபோது அக் குழந்தை குளத்தில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. பட்டீஸ்வரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) மலைச்சாமி வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.