நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மில்லடி தெருவில் வசித்து வந்த விஜயரெங்கன் (48), கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததால் கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்க விடாமல் ஒதுக்கப்பட்டனர். நேற்று மாரடைப்பால் விஜயரெங்கன் உயிரிழந்தபோதும், கிராம மக்கள் யாரும் துக்க நிகழ்வில் பங்கேற்கவில்லை. தூரத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அதிமுக கட்சியினர் மட்டுமே இறுதி சடங்குகளில் கலந்துகொண்டனர்.