தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

நாகையில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் துறை ரீதியான சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. பாஜக அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், விதை மசோதா 2025 திரும்ப பெற வேண்டும், அணுசக்தி துறையில் தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் SHANTI சட்டத்தை திரும்ப பெற வேண்டும், காப்பீடு துறையில் நிறைவேற்றியுள்ள 100% FDI மசோதாவை திரும்ப பெற்றிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. வெளிப்பாளையத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை வி பி மாலி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐசிசிடிசி, எஸ்.கே.எம். உள்ளிட்ட திரளான தொழில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து தபால் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி