வேளாங்கண்ணியில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்

வேளாங்கண்ணியில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வெயிலின் தாக்கத்திற்கு இதமாக உற்சாகமாக குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ள எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் இன்று அதிகமாக இருந்தாலும் குடைப்பிடித்தபடி பலரும் மாதாவை தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தங்களது குடும்பத்தோடும் நண்பர்களோடும் கடலில் குளித்து உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

குறிப்பாக கடைவீதி, முடி இறக்கும் இடம், மெழுகுதிரி கடைகள், பூக்கடைகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் விற்பனை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி